ஜூனோ கடவுளும் மயிலும்

ஜூனோ கடவுளும் மயிலும்

img

முற்காலத்தில் மயிலுக்கு என்று சிறப்பு வால் இருக்கவில்லை. அது மற்ற எல்லாப் பறவைகளைப் போலவே இருந்தது, யாரும் அவற்றிற்கென சிறப்பு கவனம் செலுத்தவில்லை. ஆனால் அது அழகாக இருக்க வேண்டும் என விரும்பியது. மற்றவர்கள் அனைவரும் தன்னைப் பார்த்து எப்பொழுதும் ரசிக்க வேண்டும் என்றும் அது விரும்பியது. யாரும் தன்னை அதிகமாக பார்க்கவில்லை அல்லது அது எவ்வளவு அழகாக இருக்கின்றது என சொல்லவில்லை என்று வருத்தப்பட்டது.

ஒரு நாள், காட்டில் உள்ள ஆற்றின் அருகே, அது ஜூனோ கடவுளை சந்தித்தது. ஓ, அவள் மிகவும் அழகாக இருந்தாள். “ஓ தெய்வீக கடவுளே – தங்களின் அழகு மற்றும் மகத்துவம் மிகவும் ஈர்க்கக்கூடியது. நானும் இப்படி அழகாக இருக்க விரும்புகிறேன். எல்லோரும் என்னைப் பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். ராஜா கூட என் மீது பொறாமைப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னையும் அழகாக்க முடியுமா?” என்று கூறியது.

ஜூனோ கடவுள் அந்தப் பறவையைப் பார்த்து, “அது மிகவும் திமிர் பிடித்த பறவை!” அதற்கு நல்லதொரு பாடம் கற்பிக்க வேண்டுமென விரும்பினாள். எனவே அவள் அதற்காக ஒரு அழகான, பெரிய மற்றும் அற்புதமான வாலை உருவாக்கினாள். வாலை விரித்ததும் நீலம் மற்றும் பச்சை மற்றும் தங்க நிறத்தில் மின்னியது. அரண்மனைச் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்த நாடாக்களை விட அது அழகாக இருந்தது, நதியின் நீல நீரை விட அழகாக இருந்தது, சுற்றிலும் உள்ள மரங்களின் இலைகளை விட பச்சை பசுமையாக இருந்தது. காட்டில் இருந்த அனைத்து விலங்குகளும் இதுவரை பார்த்ததில் மிக அழகான விடயம் அதுவாகும்.

எனவே அனைத்து விலங்குகளும் பறவையைச் சுற்றி வளைத்து, அதன் வாலைப் பாராட்டினர். மயில் வாலை விரித்து நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மகிழ்வித்தது. அது அதனை விரும்பியது. அது சிறந்தது, அது அற்புதமானது

அப்போது, ஒரு நகரும் நிழல் வானத்திலிருந்து அவர்களைக் கடந்து சென்றது. எல்லா விலங்குகளும் மேலே பார்த்தன. அது அவைகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்த கழுகு. அது மிகவும் உயரமானதாகவும் மற்றும் அதனது இறக்கைகள் மிகவும் அகலமாக இருந்தன, சூரிய ஒளி கூட ஒரு கணம் துண்டிக்கப்பட்டது.

“ஆஆ” விலங்குகளை வியப்பில் ஆழ்த்தியது. “பார்! அது எவ்வளவு நன்றாக பறக்கிறது என்று பாருங்கள்! அது எவ்வளவு அற்புதமாதாக தோன்றுகிறது! அது எவ்வளவு சக்தி வாய்ந்தது! ”

ஆஹா, மயில் நினைத்தது. எனக்கும் பறக்க முடியும். நான் அதனை விட அழகானவன், சக்தி வாய்ந்தவன். காத்திருங்கள், நான் அவற்றைக் காண்பிக்கின்றேன்.

அது பறக்க தனது இறக்கைகளை விரித்தது – அதனால் இனிமேலும் நன்றாக பறக்க முடியாது என்பதை உணர்ந்தது. அதனது வால் மிகவும் கனமாக இருந்தது. மிகக் குறைந்த தூரம் மட்டுமே அதனால் பறக்க முடிந்தது. அதனால் தரையில் இருந்து சில அடிகள் மட்டுமே உயர முடியும். அது அழகானதாக இருந்தபோதிலும் அதனால் வலுவான பறக்கமுடியவில்லை. தோற்றம் மட்டுமே எல்லாம் இல்லை என்று அதனை விட உங்களால் என்ன செய்ய முடியும் என்பதே மிக முக்கியமானது என்று ஜூனோ கடவுள் கற்றுக் கொடுத்தார்.