எறும்புகளும் வெட்டுகிளியும்

எறும்புகளும் வெட்டுகிளியும்

img

ஒரு காலத்தில் வெட்டுக்கிளி ஒன்று நல்ல இசைக்கலைஞராக இருந்து வந்தது. அது பாட்டு பாடவும், இசைக்கருவி வாசிக்கவும் விரும்பியது. எனவே வசந்த காலம் மற்றும் கோடை காலம் முழுவதும், தனது இசையை வாசித்து மற்றும் பாடல்களைப் பாடி மகிழ்ந்து வந்தது. வாழ்க்கை சிறப்பானது. சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மரங்களில் நிறைய பழங்கள் இருந்தன. வாழ்க்கை சிறப்பானதாக இருந்தது. நாள் முழுவதும் பாடி, நடனமாடி மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருமுறை அது புல்வெளியில் படுத்து மேகங்களில் பாடிக்கொண்டிருந்த போது, எறும்புகள் வரிசையாக கடந்து செல்வதைக் கண்டது. எறும்புகள் அனைத்தும் வாயில் உணவை சுமந்து கொண்டிருந்தன. சில எறும்புகளிடம் ரொட்டி துண்டுகள் இருந்தன.

சிலவற்றிடம் சர்க்கரை தானியங்கள் இருந்தன. சிலவற்றிடம் சிறிய பிஸ்கட் துண்டுகள் இருந்தன.

“ஏய், என்னுடன் பாட வா,” என்று எறும்புகளை வெட்டுக்கிளி அழைத்தது.

“எங்களால் முடியாது. குளிர்காலத்துக்கான உணவுகளை சேகரிக்க வேண்டும்,” என்றன.

“இன்னும் வசந்த காலம் முடியவில்லை. நீங்கள் ஏன் இப்போது குளிர்காலத்தைப் பற்றி நினைக்கிறீர்கள்? என்று வெட்டுக்கிளி கேட்டது.

“காலங்கள் நன்றாக இருக்கின்ற போதுதான், காலங்கள், சரியாக இல்லாத போது நாம் நன்றாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேலை செய்ய வேண்டும்” என்று எறும்புகள் கூறின.

“நீங்கள் மிகவும் சலிப்பானவர்களாக இருக்கின்றீர்கள்!” என்று கூறிக் கொண்டே தொடர்ந்து வெட்டுக்கிளி பாட ஆரம்பித்தது.

கோடையில், வெட்டுக்கிளி ஓடையின் அருகே இசைக்கருவியினை வாசித்துக்கொண்டிருந்த போது, மீண்டும் எறும்புகளின் வரிசையைக் கண்டது, பழங்களை சுமந்துகொண்டு நடந்து சென்றது. சில எறும்புகள் சிறிய ஆப்பிள் துண்டுகளை எடுத்துச் சென்றன. சில எறும்புகள் செர்ரி பழங்களையும் மற்றவை பிளம்ஸ்களையும்  எடுத்துச் சென்றன.

“இருந்து இசையைக் கேளுங்கள்” என்றது வெட்டுக்கிளி.

“எங்களால் முடியாது. கோடை காலம் கடந்து செல்கிறது. சீக்கிரம் பழங்களைச் சேகரிக்க வேண்டும். அல்லது குளிர்காலத்தில் நமக்கு எந்தப் பழமும் இருக்காது என்றது.

“ஹம்ப் – நீங்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்! வாழ்க்கை சிறியது. நீங்கள் அதை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.” எறும்புகளைப் பார்த்து சிரித்துக்கொண்டே இசைக்கருவியை வாசித்தது வெட்டுக்கிளி.

பின்னர் இலையுதிர் காலம் வந்தது மற்றும் இலைகளின் அனைத்து வண்ணங்களும் மாறியது. உலகம் மிகவும் அழகானது. எறும்புகள் காய்ந்த இலைகளைச் சுமந்துகொண்டு வரிசையாக நடப்பதை வெட்டுக்கிளி பார்த்தது. அது தனக்குள் முனுமுனுத்துக்கொண்டு சில தங்க இலைகளின்; படுத்தது.

“என்னுடன் இலைகளின் அழகைப் பார்த்து மகிழ வாருங்கள்” என்று எறும்புகளிடம் கூறியது.

“எங்களால் முடியாது” என்றது எறும்புகள். “குளிர்காலத்திற்கு எங்கள் வீட்டை சூடாகவும் வசதியாகவும் மாற்ற வேண்டும்.”

“உங்கள் வாழ்க்கை எவ்வளவு சோகமானது!” என்று வெட்டுக்கிளி சத்தமாக முனகிக் கொண்டு இலை படுக்கையில் மீண்டும் படுத்துக் கொண்டது.

பின்னர் குளிர்காலம் வந்தது. எல்லா இலைகளும் பழங்களும் மரங்களை விட்டு விழுந்தன. பூமியில் உள்ள அனைத்து இலைகளும் பனியால் மூடப்பட்டிருந்தன. வெட்டுக்கிளி குளிர்ச்சியாகவும் பசியாகவும் உணர்ந்தது.  அது உறங்குவதற்கு எந்தவொரு சூடான வீட்டையும் அமைக்கவில்லை, மேலும், குளிர்காலத்திற்கான உணவை சேகரிக்கவில்லை.

எறும்புகள் வாழும் இடத்திற்கு மெதுவாக நடந்து வந்தது. ஆவற்றின், கதவைத் தட்டியது. எறும்புகள் வெளியே வந்து வெட்டுகிளியை பார்த்தன.

“எனக்கு குளிர்ச்சியாகவும் பசியாகவும் இருக்கிறது. நீங்கள் எனக்கு உதவ முடியுமா?” என்று எறும்புகளிடம் கேட்டது.

“நீங்கள் ஏன் பாடிக் கொண்டும், இசைகருவியை வாசித்து கொண்டும், இலைகளின் அழகைப் ரசிக்கக் கூடாது?” என எறும்புகள் கேட்டன.

அதற்கு வெட்டுக்கிளி ஒன்றும் சொல்லவில்லை. குளிரில் அப்படியே நடுங்கிக் கொண்டிருந்தது.

எறும்புகள் வெட்டுக்கிளியை நினைத்து பரிதாபப்பட்டன. எனவே அவைகள் வெட்டுக்கிளியை அழைத்துச் சென்று, உணவு அளித்து, கிடைத்த மிகப்பெரிய இலையில் படுக்க வைத்து வெது வெதுப்பாக்கின.

எறும்புகள் நல்ல, கடின உழைப்பாளிகள்.