ஓநாய் என்று அழுத சிறுவன்

ஓநாய் என்று அழுத சிறுவன்

img

முன்னொரு காலத்தில், தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில், ஆடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தைக்கு ஒரு மந்தை இருந்தது, அவற்றை மலைக்கு அழைத்துச் சென்று புல் மேயவிட்டு மாலையில் வீட்டுக் கொட்டகைக்கு அழைத்து வருவது சிறுவனின் வேலை.

தினமும் காலையில் ஆடுகளை மலையில் உள்ள புல் தரைக்கு அழைத்துச் செல்வான். அங்கே மிகவும் அழகாக இருந்தது.

செம்மறி ஆடுகள் எப்பொழுதும் தங்கள் புல்லை நிம்மதியாக மேய்ந்து கொண்டிருந்தன.

அவன் தூங்க விரும்பினான். ஆனால் அவனது தந்தையின் கட்டளைப்படி அவனால் அதை செய்ய முடியவில்லை.

“இங்கே ஒரு ஓநாய் இருக்கிறது. மிகவும் கவனமாக இருங்கள். ஆடுகளை ஓநாய் இறையாக்குவதை நான் விரும்பவில்லை.”

ஒரு நாள் சிறுவன் மிகவும் சலிப்பாக உணர்ந்தான். அது அவனுக்கு மிகவும் சோம்பேறித்தனமாக இருந்தது. அவன் கொஞ்சம் உற்சாகத்தை விரும்பினான். அதனால் அவன் எழுந்து மலையில் இருந்து “ஓநாய், ஓநாய், ஓநாய்!” என்று கத்தினான்.

அதைக் கேட்ட கிராம மக்கள் அனைவரும் மலைஏறி ஓடி வந்தனர். கம்புகளையும் கற்களையும் தடிகளையும் ஏந்திச் சென்றனர். அவர்கள் மூச்சிரைத்து சிறுவனிடம் “ஓநாய் எங்கே?” என்று கேட்டார்கள். சிறுவன் சிரித்தான். “ஹாஹா ஓநாய் இல்லை. நீங்கள் அனைவரும் ஏமாந்து விட்டீர்கள்.”

மக்கள் மிகவும் கோபமடைந்தனர். பையனை திட்டிவிட்டு மீண்டும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து, பையனுக்கு மீண்டும் சலிப்பு ஏற்பட்டது. இம்முறை கத்திப் பயிற்சி செய்தான்.

“ஓநாய், ஓநாய், ஓநாய்!”

கிராம மக்கள் இப்படி சிறுவன் அலறுவதை அலட்சியப்படுத்த முடியவில்லை. அவர்கள் மீண்டும் குச்சிகளையும் கற்களையும் நீண்ட கம்புகளையும் எடுத்துக்கொண்டு மலையின் மீது ஓடினார்கள்.

மீண்டும் சிறுவன் கேலியாக சிரித்தான். அவன் சிரித்தபடி புல் மீது உருண்டான்.

“உங்களை மீண்டும் முட்டாளாக்கிவிட்டேன், உங்களை மீண்டும் ஏமாற்றினேன்!” அவன் கத்தினான்.

“நீங்கள் இதை ஒரு கேளிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அவன் அவர்களைப் பின்தொடர்ந்தான். ஆனால் அவர்கள் அவனுக்கு பதில் எதுவும் செல்லவில்லை.

அதனை எண்ணி சிறுவன் ஒரு வாரம் முழுவதும் சிரித்தான்.

அதன்பிறகு ஒரு நாள், புல்வெளியில் படுத்திருந்தான் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஆடுகளெல்லாம் வித்தியாசமாக கத்தும் சத்தம் கேட்டது.“ மேமே! மேமே!

சிறுவன் எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். ஆடுகள் மிகவும் பயந்து இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தன. அங்கே ஒரு பெரிய, இருண்ட நிழல் தெரிந்தது. சிறுவன் அதை உற்றுப் பார்த்தான். அது ஓநாய், கீழெ குனிந்து, குதிக்கத் தயாராக இருந்தது.

சிறுவன் அலறினான். அவன் உண்மையிலேயே பயந்தான். ஓநாய் மிகவும் பெரியதாக இருந்தது. குதிக்க ஆயத்தமானான்.

சிறுவன் சத்தமிட்டுக்கொண்டு மலையிலிருந்து இறங்கினான். “ஓநாய், ஓநாய், ஓநாய் ஒநாய்…, அவன் அலறினான்.

ஆனால் யாரும் நிமிர்ந்து பார்க்கவில்லை. கிராம மக்கள் தம் தமது வேலையை செய்தனர்.

“உதவி, உதவி, உதவி, உதவி,” சிறுவன் கத்தினான். “ஓநாய் இங்கே உள்ளது!” அவனை யாரும் கண்டுக்கொள்ளவில்லை

“ஓநாய் என் ஆடுகளை சாப்பிட போகிறது!” சிறுவன் கத்தினான் ஆனால் யாரும் வரவில்லை.

ஓநாய் ஆடுகளின் மீது பாய்ந்து அவைகளில் பலவற்றை கொன்றது. சிறுவன் கூச்சலிட்டு உதவி கேட்டான் அவனை யாரும் நம்பவில்லை. அதனால் யாரும் உதவிக்கு வரவில்லை.

பொய்யர்களை யாரும் நம்வுவதில்லை.