கருவேலமரமும் நாணலும்

ஒரு ஆற்றின் கரையில் ஒரு உயரமான கருவேல மரமும் தண்ணீரால் வளர்ந்த ஒரு சிறிய நாணலும் நின்றன. கருவேல மரம் தனது உயரத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டது மற்றும் சிறிய நாணலின் வலிமையின்மையைப் பற்றி எப்போதும் கேலி செய்து சிரித்தது.
“நீ மிகவும் சிறியவன், மெல்லியவன் மற்றும் பலவீனமானவன். சிறிய காற்றில் எப்படி வளைத்துக் கொண்டிருக்கின்றாய் என்று பார். உன்னால், குனிந்து நேராக நிற்கக் கூட முடியாது.

என்னைப் பார். நான் யாருக்கும் தலைவணங்குவதில்லை. நான் தலைவணங்க எவரும் தகுதியானவர்கள் இல்லை.”
நாணல் காற்றில் அந்தப்புறம் பார்த்தது, எதுவும் பேசவில்லை. நீரின் குளிர்ச்சியினையும், காற்று மென்மையினையும், நாணல் பார்த்து மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஒரு நாள் பலத்த காற்று வீசியது. காலையிலிருந்து நாணல் ஆங்காங்கே வீசப்பட்டது. வலுவான கருவேல மரம் அதனைப் பார்த்து சிரித்தது.
“உன்னை பார்! அங்கும் இங்கும் ஆடாமல் இருக்க உனக்கு வலிமை இல்லை. என்னைப் பார். நான் உயரமாகவும் வலுவாகவும் நிற்கிறேன். என் நேரான முதுகுத்தண்டை பார். என்னை யாராலும் வளைக்க முடியாது. நான் யாருக்கும் தலைவணங்குவதில்லை.”
காற்று அதனைக் கேட்டு கோபமடைந்தது. காற்று மேலும் பலமாக வீசியது. நாணல் கிட்டத்தட்ட தரையில் தூக்கி எறியப்பட்டது, ஆனால் காற்றினால் அதனை பிடுங்க முடியவில்லை. இருப்பினும், கருவேல மரம் வளையவில்லை. காற்று மேலும் மிகக் கடுமையாக வீசியது. திடீரென பலத்த சத்தம் கேட்டது. கருவேல மரம் பூமியில் விழுந்தது.
நாணல் கருவேல மரத்தை வருத்தத்துடன் பார்த்தது. “நீங்கள் உயிர்வாழ விரும்பினால் சில நேரங்களில் நீங்கள் கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்,” என்று அங்கு விழுந்த கருவேல மரத்திடம் நாணல் கூறியது. ஆனால் கருவேல மரத்தால் அதனைக் கேட்க முடியவில்லை ஏனென்றால், கருவேல மரம் இறந்துவிட்டது.