காற்றும் சூரியனும்

காற்றும் சூரியனும்

img

ஒரு காலத்தில் வடக்காற்றானது தனது சக்தியைப் பற்றி மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது. அது இந்த பக்கமாகவும் அந்த பக்கமாகவும் வூஷிங் என்ற சத்தத்துடன் வீசிக் கொண்டிருந்தது – எங்கு சென்றாலும், மரங்கள் குலுங்கின, ஆடைகள் பறந்தன, பூக்கள் தங்கள் இதழ்களை இழந்தன. காற்று அவ்வாறு தனது பலத்தை காட்டுவதற்கு விரும்பியது.

“உலகில் நான் மிகவும் சக்தி வாய்ந்தவன்” என்று அது பெருமைப் பேசிக் கொண்டது.

“அப்படியா?”, “நீ சொல்வது உறுதியா?” என்று சூரியன் கேட்டது.

“நிச்சயமாக நான் உறுதியாக இருக்கிறேன்,” “உன்னை விட நான் சக்தி வாய்ந்தவன். உன்னால் மக்களை நகர்த்தவும் தள்ளவும் முடியாது. ஆனால், என்னால் முடியும்.” என்று வடக் காற்று கூறியது.

“அதிகாரம் என்பது மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதல்ல” என்று சூரியன் கூறியது. “நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதனை மக்களின் மூலம் செய்து பெறுவது.”

காற்று சிரித்தது. அது அந்த பக்கமும், இந்த பக்கமுமாக வூஷிங் என்ற சத்தத்துடன் வீசிக் கொண்டிருந்தது. “நான் விரும்பியதை அவர்களை வைத்துப் என்னால் பெற முடியும். காத்திருங்கள், நான் உங்களுக்குக் அதனை காட்டுகின்றேன்”; என்று காற்று கூறியது. கீழே அந்த மனிதன் கோட்டும் தொப்பியும் அணிந்திருப்பதைப் பார்த்தீர்களா?

சூரியன் கீழே பார்த்தது, கீழே ஒரு கோட் மற்றும் தொப்பி அணிந்த ஒரு மனிதன் நடந்து கொண்டிருந்தான்.

“அவரை பார்க்கவும்!” என்று வடக்காற்று கூறியது. பிறது அது பல முறை மனிதனைக் கடந்து, பலமாக வீசத் தொடங்கியது.

அந்த மனிதன் கோட்டை தனக்குள் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். தொப்பியை காதுகளுக்கு நெருக்கமாக அழுத்திக் கொண்டான்.

காற்று மேலும் பலமாக வீசியது. அந்த மனிதன் தனது கோட் மற்றும் தொப்பியை இன்னும் இறுக்கமாகப் பிடித்து கொண்டான்.

காற்று மிகவும் சத்ததுடன் வேகமாக வீசியது, விரைவில் அம்மனிதன் சோர்வடைந்தான்.

“நீங்கள் முழுமையாக முடித்துவிட்டீர்களா?” சூரியன் கேட்டது. “இப்போது என்னைப் பாருங்கள்,” என்று கூறியது. சூரியன் மிகப்பிரகாசமாக பிரகாசிக்கத் தொடங்கியது.

சிறிது நேரத்தில், அந்த மனிதன் தனது கோட்டை கழற்றினான். அவன் சூடாக உணர்ந்தான்.

சூரியன் இன்னும் பிரகாசமாக பிரகாசித்தது. அந்த மனிதன் தனது தொப்பியைக் கழற்றினான். அவனுக்கு வியர்த்தது.

“பார்த்தாயா?” என்றது சூரியன். “எல்லா நேரத்திலும் நீங்கள் விரும்புவதைப் பெற நீங்கள் மக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை.”

வடக் காற்று எதுவும் பேசவில்லை. அது தனது ஆணவத்தைக் கண்டு வெட்கமடைந்து சென்றது.